Sunday 31 December 2017

உருளைகிழங்கு முறுக்கு



                                   உருளைக்கிழங்கு முறுக்கு
                                  ------------------------------------------
வெகு நாட்களுக்குப் பின்  பூவையின்  எண்ணங்களில் ஒரு ரெசிபி 

உருளைக்கிழங்கு முறுக்கு
 தேவையான பொருட்கள்
பெரிய உருளைக்கிழங்கு -----4
அரிசி மாவு……………………………………………….3 மேஜைக்கரண்டி
எள்……………………………………………………………………….1 மேஜைக்கரண்டி
சீரகம்  ……………………………………………………………….1 தேக்கரண்டி
உப்பு ……………………………………………………………………….ருசிக்கேற்ப
எண்ணை ……………………………………………………….1 மேஜைக்கரண்டி
செய்முறை
உருளக்கிழங்கை வேக வைத்து  தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும் 
அரிசி மாவுடன் சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும் அத்துடன்  உப்பு சீரகம்  எள் ஆகியவற்றைச் சேர்க்கவும் ஆறவைத்து மசித்த உருளைக் கிழங்குடன் சேர்க்கவும் சிறிது எண்ணை கலந்து நன்கு பிசையவும்சிறு உருண்டைகளாக  உருட்டி முறுக்கு அச்சில் போட்டு ஈரத்துணியில் பிழிந்து கொள்ளவும் இதை வெயிலில் காய வைத்து தேவைப்படும்போது எண்ணையில் பொரித்துக் கொள்ளலாம் பிழிந்த முறுக்குகளைக் காய வைப்பது தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவே  இல்லையென்றால் உடனே பொரித்து எடுத்து உண்ணலாம்

 செய்து பார்த்துக் கருத்து சொல்லுங்கள் நட்புகளே








9 comments:

  1. இது மாதிரிச் செய்தது இல்லை, ஆனால் உருளைக்கிழங்கோடு கடலைமாவு, அரிசிமாவு கலந்து ஆலு புஜியா என்று காராசேவ் மாதிரிப் பிழிந்தது உண்டு. அதற்குக் காரம் போட வேண்டும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம், சாட் மசாலா சேர்த்துக் கொஞ்சம் வெண்ணெயோடு நன்கு பிசைந்து காராசேவுத் தட்டில் போட்டுத் தேய்க்க வேண்டும். ஓமப்பொடி மாதிரியும் பிழியலாம்.

    ReplyDelete
  2. இது வடகம் போல் தெரிகிறது (காயவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக்கொள்வது).

    செய்துபார்க்கும் வாய்ப்பு குறைவு.

    ReplyDelete
  3. உருளை கலந்த புஜியா சாப்பிட்டதுண்டு. இப்படி முறுக்கு சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
  4. வித்தியாசமான வடக முறுக்கு.. ஆனா இது உடனே பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்காதே..

    ReplyDelete
  5. வித்தியாசமாய் இருக்கிறது. செய்து பார்ப்போம். படம் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இங்கே உருளைக்கிழங்கு மாவு கிடைக்கிறது. ஒருநாள் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
  9. முறுக்கு சாப்பிடுவதற்கு ''கருக்கு முருக்கு" என்று நன்றாக உள்ளது. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete